தினமலர் 17.09.2010
கிராம பஞ்சாயத்துக்கள் விஸ்தீரணம் : மாநகராட்சி கூட்டத்தில் நீக்கப்பட்டு தீர்மானம்
தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சேர்க்கப்பட்ட ஐந்து கிராம பஞ்சாயத்துக்கள் விஸ்தீரணம் அதிகமாக உள்ளதாக கூறி நேற்று திடீரென அதிரடியாக நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் குபேந்திரன், துணைமேயர் தொம்மைஜேசுவடியான், மாநகராட்சி சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி, இளநிலை பொறியாளர் சரவணன், வருவாய் அதிகாரி ஜெயக்குமார், நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர். நேற்றும் அவர்கள் புறக்கணிப்பு செய்தனர். தூத்துக்குடியை சுற்றியுள்ள 10 கிராம பஞ்சாயத்துக்களான அய்யனடைப்பு, சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், மீளவிட்டான், புதூர் பாண்டியாபுரம் ஆகியவற்றை தூத்துக்குடி நகராட்சியுடன் இணைத்து தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்வு செய்யப்பட்டது.
புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதியுடன் சேர் த்து மாநகராட்சியின் மொ த்த பரப்பளவு 133.10 சதுர கிலோ மீட்டராகும். தமிழகத்தில் உள்ள மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ள பரப்பளவை விட தூத்துக்குடி மாநகராட்சியின் பரப்பளவு அதிகமாக உள்ளது. தூத்துக்குடி மை யப்பகுதியில் இருந்து அதிகப்பட்சமாக 12 கிலோ மீட்டர் வரை இந்த பகுதிகள் உள்ளது.அத்துடன் இரண்டு ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள்ளும், இரண்டு சட்டசபை தொகுதிக்குள் இவை வருகிறது.
கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை பத்து என்பது மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ஊராட்சிகளை இணைப்பதால் அந்த ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் கலைஞர் வீட்டுவசதி திட்டம் போன்ற திட்டங்கள் உட்பட கிடைக்காமல் போகும் என்கிற நிலை உருவானதாக கூறப்படுகிறது.இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு அருகில் நகர்புறமாக வளர்ச்சியடைந்துள்ள தூத்துக்குடி ரூரல், மீளவிட்டான், முத்தையாபுரம், சங்கரப்பேரி, அத்திமரப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளை மட்டும் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அய்யனடைப்பு, மாப்பிள்ளையூரணி, முள்ளக்காடு, கோரம்பள்ளம், புதூர்பாண்டியாபுரம் ஆகிய பஞ்சாயத்துக்களை மாநகராட்சியில் இணைக்க முடிவு செய்யப்பட்டதை கைவிட முடிவு செய்யப்பட்டு, அந்த 5 ஊராட்சிகளையும் மாநகராட்சியில் இருந்து நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.இதனால் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இனிமேல் 5 ஊராட்சிகள் மட்டும் இø ணயும். தற்போதைய மாநகராட்சியின் எல்லை 90.663 சதர கிலோ மீட்டராகவும். மொத்த மக்கள் தொகை (2001 கணக்குப்படி) 3 லட்சத்து 20 ஆயிரத்து 466 ஆக இருக்கும். ஆண்டு வருமானம் 49 கோடியே 87 லட்சமாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் உடனடியாக அரசுக்கு அனுப்பபட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே பழைய நிலையில் சேர்க்கப்பட்ட பகுதிகள் அப்படியே இருக்க வேண்டும். அதில் எதனையும் நீக்க கூடாது. இவ்வாறு நீக்குவதால் சில உள்நோக்கம் இருப்பதாக கூறி கம்யுனி ஸ்ட் கவுன்சிலர் ராஜா வெளிநடப்பு செய்தார். இ தனை தொடர்ந்து அவரச கூட்டத்தில் உள்ள தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேறியது.