தினமணி 19.02.2010
கிருஷ்ணகிரி நகராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு
கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 3-வது வார்டில் ரூ.1.2 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர்த் தொட்டியை நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் புதன்கிழமை தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட 3-வது வார்டு பகுதியில் உள்ளது பெங்காலி தெரு. இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை போக்கும் வகையில், ஒருங்கிணைந்த வீடுகள் மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சி.வி.பௌலோஸ், பொறியாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.