கிருஷ்ணகிரி நகராட்சி அவசர கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த அவசர கூட்டத்தில், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட முயற்சிகள் எடுத்த’ தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றினர்.
கிருஷ்ணகிரி நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். கமிஷனர் (பொ) இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
“காவிரிநடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டு தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டி வருங்கால தமிழக மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி சாதனை படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தீர்மானம் குறித்து நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம், கவுன்சிலர்கள் மாரியப்பன், சோபன்பாபு, சரஸ்வதி ஆகியோர் பேசினர். தொடர்ந்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.