தினகரன் 31.05.2010
கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கீழக்கரை, மே 31: கீழக்கரை யில் நேற்று முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கீழக்கரையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சியினர் ஈடுபட்டனர். காலை முக்கு ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.
வள்ளல் சீதக்காதி சாலை, இந்து பஜார் பகுதி மற்றும் கடற்கரை பகுதி வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்து பஜாரில் சாலைகளில் ஆக்கிரமித்திருந்த பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் டீக்கடைகள் அகற்றப்பட்டன. ஒரு டீக்கடை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.