தினமலர் 30.06.2010
கீழக்கரையில் போக்குவரத்து ஸ்டேஷன் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
கீழக்கரை: கீழக்கரையில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது.ஆணையாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார். வரி மற்றும் வரியற்றஇனங்கள் கேட்பு,வசூல்,நிலுவை விபரம் வாசிக்கப்பட்டது. நகராட்சி கூட்ட அரங்கில் நவீன ல் கணினி மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பணியாளர் நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் மணல்,ஜல்லி, செங்கல் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தலைமை எழுத்தர் மதிவாணன் நன்றி கூறினார்