தினமணி 18.03.2010
கீழக்கரை நகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கீழக்கரை, மார்ச் 17: கீழக்கரை நகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.ஹச்.பஷீர் அஹமது தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி வி.சுந்தரம், தலைமை எழுத்தர் கே.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வீடு கட்டுவதற்கான கட்டட உரிமம் (பிளான் அப்ரூவல்), புதிய வரி விதிப்பு, வரி மாறுதல், குடிநீர்க் கட்டணங்கள், புதிய குடிநீர் இணைப்புகள், நிறுவனங்களின் உரிமம் தொடர்பான 10-க்கும் மேற்பட்டோரது மனுக்கள் மீது முகாமில் தீர்வு காணப்பட்டன.
சுகாதாரம் தொடர்பாக ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டன. முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்று தலைவர் பஷீர் அஹமது தெரிவித்தார்.