தினமணி 31.08.2010
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை
ராமநாதபுரம், ஆக. 30: கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் நடத்திய திடீர் சோதனையில், நிர்வாக அலுவலர் உள்பட 4 பேரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத பணம் ரூ| 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழக்கரை நகராட் சியில் காலியாக உள்ள 3 வரி வசூல் அலுவலர்கள், ஓர் இளநிலை உதவியாளர் ஆகிய 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 12 பேர் கலந்து கொண்டனர்.
இப்பணியிடங்களுக்கு தலா |ரூ7ஆயிரம் வீதம் பணம் பெற்றுக் கொண்டு பணியிடம் வழங்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன. இது தொடர்பாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. கலாவதி தலைமையில் போலீஸôர், கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில், நகராட்சி நிர்வாக அலுவலர் சுந்தரத்திடமிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ| 1 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தலைமை எழுத்தர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சரவணன், ஓவர்சீயர் தேவி ஆகியோரிடமிருந்து மொத்தம் ரூ| 42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.