தினமலர் 03.02.2010
கீழக்கரை நகராட்சி கூட்டம்
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடந்தது. தெருவிளக்குகள் விலை தொடர்பாக, கவுன்சிலர்கள் ஹமீதுகான்,மணிகண்டன்,பாபு, லாபிர் ஆட்சேபனை செய்தனர். இது தொடர்பாக தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கு மிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பொது சுகாதார உபயோகத்திற்கு தேவையான சுண்ணாம்புதூள் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பயன்பாட்டிற்கு தேவையானசோடியம் மற்றும் குழல் விளக்கு பழுது நீக்க உபகரணங்கள் சப்ளை செய்த வகைக்கு 90ஆயிரத்து 19 செலவு காட்டியிருப்பதற்கும் கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதை தொடரந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ,கீழக்கரை சி.எஸ்.ஐ., சர்ச் ரோடு வழியாக 21 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டுவரும் சிமென்ட் சாலைக்கு கூடுதலாக 3லட்சம் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதால், இதை பொது நிதியிலிருந்து செலவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து கவுன்சிலர் ஹமீது கான் பேசுகையில்,””கீழக்கரையில் நடைபெறவுள்ள பாதாள சாக்கடை திட்டம் எப்ரலில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த ரோடுகள் தோண்டும்போது இதுன்செலவு எல்லாம் வீணாகிவிடும்” என்றார்