தினமணி 31.08.2010
குடந்தை நகராட்சிப் பகுதியில் சாலைகளைப் புதுப்பிக்க முடிவு
கும்பகோணம், ஆக. 30: கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் ரூ10 கோடியில் சாலைகளைப் புதுப்பிக்க நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நகராட்சியின் நகர்மன்ற அவசரக் கூட்டம், தலைவர் சு.ப. தமிழழகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் என். தர்மபாலன், ஆணையர் பூங்கொடி அருமைக்கண் மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், மாநில நிதி ஒதுக்கீட்டில் நிதி வழங்க ஏதுவாக நகராட்சி நிர்வாக இயக்குனரக அறிவுறுத்தலின்பேரில், கோயில்கள், முக்கிய புராதானச் சின்னங்கள், தொழில்கூடங்கள், பள்ளிகள், போக்குவரத்துக்குரிய முக்கியச் சாலைகள் ஆகிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதைச்சாக்கடை, குடிநீர் விநியோகக் குழாய் அமைத்தல், மழை, இடர்பாடுகள் ஆகிய இனங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்நகராட்சிப் பகுதியில், சுமார் 50 கி.மீ. தொலைவுக்குரூ | 10 கோடியில் சாலைப்பணிகளை மேற்கொள்ளவதற்கான கருத்துருவை நகராட்சி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைத்து நிதி பெறத் தீர்மானிக்கப்பட்டது.