தின மணி 20.02.2013
குடந்தை பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்க
கும்பகோணம் மோதிலால் தெருவில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மோதிலால் தெருவில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த தெருவின் இருபுறமும் தள்ளுவண்டியில் பழ வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இந்த தெருவினை கடந்துதான் மீன்மார்கெட் மற்றும் தஞ்சை மெயின்ரோடு, கல்லூரி, பள்ளிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதால் இப்பகுதி கூட்ட நெரிசலாலும், பரபரப்பாகவும் எப்போதும் காணப்படும். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி ஜெயராமனுக்கு மோதிலால் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது என்ற புகார் சென்றது. இதையடுத்து டிஐஜி உத்தரவின்பேரில் கும்பகோணம் போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.