தினமலர் 25.05.2010
குடிநீரில் நோய் கிருமிகளை அழிக்கும் நவீன இயந்திரம்
கம்பம் : குடிநீரில் தொற்று நோய் கிருமிகளை அழிக்க நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சில வாரங்களாக உத்தமபாளையம் தாலுகாவில் மாசுபட்ட குடிநீர் சப்ளையால் வயிற்றுப்போக்கு மற் றும் காலரா ஏற்பட்டது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 500க் கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.
சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மருத்துவத்துறை, உள் ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது. இந்நிலையில் கலக்கப்படும் குளோரின் ஒரே சீராக இல்லாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு இன்னமும் உள்ளது. பம்பிங் ஸ்டேஷனில் கலக்கும் போது உள்ள வீரியம், போகப் போக குறைந்து விடுகிறது. கடைசி பகுதிகளில் குளோரின் இல்லாத நிலை காணப்படுகிறது. எனவே குடிநீரில் உள்ள தொற்று நோய் கிருமிகளை அழித்து, சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பம்பிங் ஸ்டேஷன்களில் பம்பிங் செய்தபின், விநியோகம் செய்யும் இடத்திற்கு முன்பாக “சில்வர் அயோனேசேசன்‘ என்ற கருவியை பொருத்தும் பணியில் வாரிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இந்த கருவியின் பயன்பற்றி வாரிய அதிகாரிகள் கூறுகையில் “பம்பிங் செய்யப்பட்ட குடிநீரில் குளோரின் கலக்காமல், இந்த சில்வர் அயோனேசேசன் கருவி வழியாக செலுத்தும் போது, குடிநீரில் உள்ள தொற்று நோய் கிருமிகளை இந்த கருவி அழித்து விடும். பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த கருவி ஏற்கனவே பரீட்சார்த்த அடிப்படையில் லோயர்கேம்பில் பொருத்தப் பட் டது. தற்போது உத்தமபாளையம், பாலக் கோம்பை உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பம்பிங் ஸ்டேஷன்களில் இந்த கருவி பொருத்தும் பணியில் வாரிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.