தினமணி 10.11.2009
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோபி நகராட்சி கோரிக்கை
கோபி, நவ. 9: பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோபி நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைமை நீரேற்ற நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்படும் பிரதான குழாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கோபி நகரில் சீரான குடிநீர் வழங்குவதில் கால இடைவெளி அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இத்தகவலை கோபி நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் பிரதிநிதி வி.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.