குடிநீரை பற்றாக்குறையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை
பொது மக்களுக்கு தேவையான குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் வினியோகம் செய்து வருகிறது தற்போது கேன் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள டயல்பார் வாட்டர் என்ற திட்டத்திபடி லாரிகள் மூலம் 6000 லிட்டர் ரூ.400, 9000 லிட்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் வேண்டும் என்று போன் செய்தால் அந்த இடத்திற்கு லாரி மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. வியாபார பயன்பாட்டுக்கு வேண்டும் என்றால் முறையே ரூ.510, ரூ.765 விலையில் வழங்கப்படுகிறது. பொது மக்களே லாரிகளை கொண்டு வந்து தண்ணீர் தேவை என்றால் ஆயிரம் லிட்டர் ரூ.40-க்கும், வணிக பயன்பாட்டிற்கு ரூ.60-க்கு விற்கப்படுகிறது. மேலும் தலைமை அலுவலகத்தில் 45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூறலாம். குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் பாதுகாப்பானது என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.