தினமணி 16.12.2009
குடிநீர்த் திட்டம்: தலைமை பொறியாளர் ஆய்வு
திருச்சி, டிச. 15: திருச்சியில் ரூ. 169 கோடியில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக, நகராட்சி நிர்வாக இயக்குநரக தலைமைப் பொறியாளர் எஸ். ரகுநாதன் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், உதவிச் செயற்பொறியாளர் என். பாலகுருநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குடிநீர் உந்து குழாய் பதிக்கும் பணி, இந்தக் குழாய்களுக்கு தாங்கு பாலம் அமைக்கும் பணி போன்றவற்றை விரைந்து முடிக்க வாட்டர் மற்றும் பவர் கன்சல்டன்சி சேவை நிறுவன பிரதிநிதிகளுக்கு ரகுநாதன் உத்தரவிட்டார்.