தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டர்கள் பறிமுதல்
ிருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் சட்டவிரோதமாக
குடிநீர் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்களை அதிகாரிகள்
வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியின் பல்வேறு இடங்களில் மின் மோட்டார்கள்
பொறுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இந்நிலையில், வியாழக்கிழமை நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில்,
பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பே-கோபுரம், 4-வது தெருவில் உள்ள
வீடு, கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது சட்ட விரோதமாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டர்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 8 மின் மோட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆணையர் எச்சரிக்கை: நகராட்சிப் பகுதியில் இதுபோன்று மின்மோட்டார்
பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், குடிநீர் இணைப்பு
துண்டிக்கப்படும். குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள்
பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், குறிப்பிட்ட வீடு மற்றும் கடைக்கு மறு குடிநீர் இணைப்பு
வழங்குவதும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். எனவே, நகராட்சிப் பகுதி
பொதுமக்கள் இனிமேல் குடிநீர் உறிஞ்சும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று
நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.