தினமலர் 13.08.2010
குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும்
விழுப்புரம்: வளவனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இது குறித்து வளவனூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வளவனூர் பேரூராட்சியில் 200க்கும் மேற்பட் டோர் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு குடிநீர் கட்டணம் செலுத் துமாறு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பலமுறை நேரிலும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. உடனடியாக கட்டணம் செலுத்தாதவர் களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவர் கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் அனுமதி பெறா மல் குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் தற்போதைய புதிய அரசாணைப் படி புதிய குடிநீர் இணைப் புக்கான பகுதி தொகை 3,000 ரூபாய் என்பதை 6,000 ரூபாயாக செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் மின்மோட்டார் பொருத்தியுள்ளவர்களும் தாங்களாகவே இணைப்பை துண்டித் துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் திடீர் சோதனை செய்து குடிநீர் இணைப்பை துண்டிப்பதுடன், மின் மோட்டாரும் பறிமுதல் செய்யப்படும்.