தினமலர் 25.11.2010
குடிநீர் காய்ச்சி குடிக்க அறிவிப்பு
கரூர்: மழைக்காலத்தை முன்னிட்டு குடிநீரை காய்ச்சி பயன்படுத்த கரூர் நகராட்சி நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் நகரில் தற்போது மழையினால், நகரில் பல இடங்களிலும் தண்ணீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அசுத்த நீர் பல இடங்களிலும் தேங்க வாய்ப்புள்ளதால், தண்ணீரில் பரவக்கூடிய காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை மற்றும் தொற்றுநோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. நகரில் உள்ள ஹோட்டல், டிபன் கடை, டீக்கடைகளில் வாடிக்கையாளருக்கு குடிநீரை காய்ச்சிய பிறகு விநியோகம் செய்ய வேண்டும். உணவு பொருட்களை “ஈ‘ மொய்க்காத வகையில் மூடி வைக்க வேண்டும்.பொதுமக்கள், தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமலும், சிறுநீர் உள்ளிட்ட அசுத்தம் செய்யாமலும், குப்பை சேகரிக்காமலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.