தினமலர் 28.01.2010
குடிநீர் குழாய்கள் ‘கட்‘: மாநகராட்சி நடவடிக்கை
மதுரை : மதுரையில் பலர், குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளனர். நேற்று கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காமராஜர்புரம், குயவர்பாளையம், அனுப் பானடி பகுதிகளில் உதவி கமிஷனர் அங்கயற்கண்ணி தலைமையில் உதவி பொறியாளர்கள் காமராஜ், அஷ்ரப் அலி மற்றும் ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.குழாய் வரி செலுத்தாத 40 வீடுகளுக்கான இணைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். “உடனடியாக பொதுமக்கள் குடிநீர் வரியை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் இணைப்புகள் துண்டிக்கப் படும்‘ என மாநகராட்சி எச்சரித்துள்ளது.