தினமணி 14.12.2009
குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடக்கம்
புதுச்சேரி, டிச. 13: அரியாங்குப்பம் தொகுதிக்கு உள்பட்ட மணவெளி கட்டபொம்மன் நகர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை அத் தொகுதியின் எம்எல்ஏ ஆர்கேஆர் அனந்தராமன் தொடங்கி வைத்தார். ÷இப்பணிகள் நிறைவுபெற்ற பிறகு கட்டபொம்மன் நகர், பெரியார் நகர், நேதாஜி நகர், கலைஞர் நகர், அண்ணா வீதி, சுடலை வீதி, பூங்கா வீதி, திருவள்ளுவர் வீதி, ஓடைவெளி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று எம்எல்ஏ அனந்தராமன் கூறினார்.÷நிர்வாக பொறியாளர் எஸ்.ஜெயகுமார், உதவிப் பொறியாளர் சதாசிவம், கவுன்சிலர் கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.