தினமலர் 28.07.2010
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயக்கம்
ஓசூர்: ஓசூர் புதுபஸ்ஸ்டாண்ட்டில் 10 லட்சம் ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நகராட்சி தலைவர் சத்யா துவக்கி வைத்தார்.
ஓசூர் நகராட்சி அலுவலகம் அருகே பெங்களூரு சாலையில் 11 கோடி ரூபாயில் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இங்கு மூன்று சுரங்க பாதைகள், செயற்கை நீரூற்றுகளுடன் ஒரே நேரத்தில் 50 பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் சுகாதாரமான குடிநீர் குடிக்கும் வகையில் “டிரேடர்ஸ் அசோஷியேசன்‘ சார்பில் 10 லட்சம் ரூபாயில் இரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றின் பத்து ஆண்டு பராமரிப்புக்கு “டிரேடர்ஸ் அசோசியேஷன்‘ மூலம் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு 500 லிட்டர் தண்ணீர் வீதம் இரு குடிநீர் சுத்திகரிப்பு இயங்கங்களிலும் பயணிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறப்பு விழா பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்தது. தமிழக வணிக பேரவை துணை தலைவர் அந்தோணி சாமி தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ஹேம்ராஜ், சிப்காட் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்ரீதர் ராம் மோரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சத்யா குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். நகராட்சி துணை தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க., நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், கவுன்சிலர்கள் ரமேஷ், சீனிவாசன், ஜெய் ஆனந்த், எல்லோராமணி, இக்ரம்அகமது, பிரகாஷ், இந்திராணி, பிரேமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.