தினமணி 16.04.2010
குடிநீர் தட்டுப்பாடு: அதிக நிதி ஒதுக்க கோரிக்கை
சென்னை, ஏப்.15: குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை இது குறித்து அவர்கள் விடுத்த கோரிக்கை:
ஞானசேகரன் (காங்கிரஸ்): குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேலூர் மாவட்டத்துக்கு ரூ. 2 கோடி ஒதுக்கியுள்ளதற்கு நன்றி. இந்த நிதி வேலூர் நகரத்துக்குக்கூட போதாது.
வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் குடிநீர் தேவையைச் சமாளிக்க ரூ. 65 கோடி தேவை. மாவட்ட ஆட்சியர் ரூ. 25 கோடி கேட்டுள்ளார். குறைந்தபட்சம் வேலூர் மாவட்டத்துக்கு ரூ. 45 கோடியாவது ஒதுக்க வேண்டும்.
ராமசாமி (இந்திய கம்யூனிஸ்ட்): குடிநீர் தேவையை சமாளிக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ரூ. 1 கோடி ஒதுக்க வேண்டும்.
பேரவையில் இன்று…
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் கிடையாது. காலை பேரவை தொடங்கியதும், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.
இதன் பின், பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், அதற்கு அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுரையும் இடம்பெறுகிறது.