தி இந்து 27.04.2017
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் வேலுமணி
தமிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி
ஏற்பட்டுள்ளதாகவும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு
இறங்கியுள்ளதாகவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் எடுக்கப்பட்டு வரும்
நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் இன்று
சென்னை மாநகராட்சி வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை
கூட்டத்திற்கு பிறகு பேசி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பிவேலுமணி
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது,
இருப்பினும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை
அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
சென்னையை பொறுத்தவரை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஏரி தண்ணீரை
முறைப்படுத்தும் திட்டம் போன்றவற்றின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு
கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.
சென்னையில் வடசென்ன, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில்
நேற்று மின்வெட்டு ஏற்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு, “தமிழகத்தில்
மின்வெட்டு என்ற ஒன்று ஜெயலலிதா ஆட்சிக்குவந்த பின்னர் இல்லை. நேற்று
ஏற்பட்ட மின்தடை சீர்செய்யப்பட்டுவிட்டது” என்றார்.