தினமணி 20.06.2013
- கடலூர்
நகரில் சில வார்டுகளில் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. இதனால் காசு கொடுத்து
குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
- இதை கருத்தில்
கொண்டு கடலூர் நகராட்சிப் பகுதியில் 11 இடங்களில் ரூ.8.75 லட்சம்
மதிப்பீட்டில் சிறுமின் விசைப் பம்புகள் அமைக்கப்படுகின்றன.
- இது
குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: கடலூர் நகரில் தற்போது நிலவி
வரும் வறட்சியை சமாளிக்கும் வகையில் கடலூர் துறைமுக நகர், பாவுக்காரத்
தெரு, சராங்கு தெரு, கொடிக்கால் குப்பம், மாந்தோப்பு, நத்தவெளி, மணவெளி,
முத்துக்குமரன் காலனி, காமராஜ் நகர் பின்புறம், இந்திராநகர் மற்றும் சேட்டு
காலனி ஆகிய 11 இடங்களில் சிறு மின் விசை பம்புகள் அமைக்கப்படுகின்றன.
- 11
இடங்களிலும் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து அதில் சிறு மின் விசை பம்புடன்
குடிநீர்த் தொட்டிகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்
செய்யப்படும். இதற்காக டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்
என்றார்.