தினமலர் 30.03.2010
குடிநீர் தட்டுப் பாட்டை உடனடியாக தீர்க்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
செய்யாறு: ‘செய்யாறு டவுன் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப் பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும்‘ என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
செய்யாறு நகராட்சி கூட் டத்துக்கு அதன் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். துணைச்சேர்மன் மோகனவேல், இன்ஜினியர் ராஜா, துப்புரவு ஆய்வாளர் மதன், ஓவர்சீயர் ராமன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:வெங்கடேசன்(திமுக): செய்யாறு நகரில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 6 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறது. 1வது, 2வது வார்டு மக்களின் பயன்பாட்டுக்காக ஈமச்சடங்கு காரிய மேடை அமைக்க வேண்டும்.லோகநாதன்(அதிமுக): நகர் பகுதிகளில் உள்ள கை பம்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் அமைக்க வேண்டும்.நடேசன்(காங்.,) நகராட்சி பஸ்நிலைய இலவச சிறுநீர் கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிப்பதா?தலைவர்: அவ்வாறு புகார் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.விஸ்வநாதன்: நகரில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.பச்சையப்பன் (அதிமுக): தாய்சேய் நல கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டும்.பேபிராணி(திமுக): 12வது வார்டில் குடிநீர், சாக்கடை கழிவுநீர் போல் வருகிறது.குமாரசாமி(திமுக): நகர மக்களுக்கு உடனடியாக இலவச டி.வி., வழங்க வேண்டும்.தலைவர்: அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்னையை போக்க முயற்சி செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.