தினமணி 27.04.2013
குடிநீர் தொட்டி திறப்பு
வத்தலகுண்டு 13ஆவது வார்டில் பொதுநிதியிலிருந்து ரூ.1.60 லட்சம் செலவில் அமைக்கபட்ட குடிநீர்த் தொட்டி திறக்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் சுசித்ரா பாண்டியன் விழாவுக்குத் தலைமை தாங்கி குடிநீர்த் தொட்டியைத் திறந்து வைத்தார். அதிமுக நகரச் செயலாளர் எம்.வி.எம். பாண்டியன் பேரூராட்சி துணைத் தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகூர்கனி, ஹபிப்ராஜா, இளங்கோவன், செல்லத்துரை, முத்துச்சாமி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.