தினமணி 10.11.2009
குடிநீர் பணிமனை முகவரி மாற்றம்
சென்னை,நவ.9: சென்னை குடிநீர் வாரிய பகுதி அலுவலகம் 8-ன் கீழ் இயங்கி வரும் பிரிவு அலுவலக எண்-129 புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
குடிநீரேற்று நிலையம் (டபுள் டேங்க்), ஆர்.கே.சண்முகம் சாலை, கே.கே.நகர்,சென்னை-78 என்ற முகவரியில் திங்கள்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குடிநீர்,கழிவு நீர் தொடர்பான குறைகள் மற்றும் குடிநீர்,கழிவுநீர் வரி மற்றும் கட்டணம் ஆகியவற்றுக்கு புதிய அலுவலகத்தை அணுகுமாறு சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.