தினமணி 22.04.2010
குடிநீர் வடிகால் வாரியம்:இளநிலை உதவியாளர் பணி வாய்ப்பு
விருதுநகர், ஏப். 21: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரிகள் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்) பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது.
இப் பணிக்கு வயது வரம்பு இல்லை. மேற்படி பணிக் காலியிடம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்துப் பதிவுதாரர்களிலிருந்து பரிந்துரை செய்யப்படவுள்ள பட்டியல் மாவட்ட இணையதள முகவரில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தகுதியுடைய அனைத்துப் பதிவுதாரர்களும் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறாவிடில், ஏப். 23-ம் தேதிக்கு முன்பு தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டை, புதுப்பித்தலுக்கான சான்று ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து முறையிடலாம் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.