தினமலர் 24.04.2010
குடிநீர் வாரியத்தில் வேலை வாய்ப்பு சான்றிதழ் சரி பார்க்க அழைப்பு
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு குடிநீர் வடிகால் மற்றும் நீரகற்று வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடம் நிரப்ப உள்ளதால், சான்று சரி பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கருணாகரன் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டபடிப்பு முடித்து இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 18 வயது முதல் 58 வயதுவரை இருக்க வேண்டும். தகுதியுடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள் அனைத்து கல்வி சான்றுகள், ஜாதி சான்ன்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வரும் 27ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், ‘டான்சி‘யில் போர்மென் நிலை-2 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இப்பணியிடத்துக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் 40 வயது வரையிலும், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 37 வயது வரையிலும், இதர வகுப்பினர் 35 வயது வரையிலும் இருக்க வேண்டும்.தகுதியுடைய கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள் அனைத்து கல்வி சான்றுகள், ஜாதிசான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வரும் 27ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளத