தினகரன் 29.06.2010
குடிநீர் வாரிய அலுவலகம் மாற்றம்
சென்னை
, ஜூன் 29: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை குடிநீர் வாரியம் பகுதி
“அ” வின் கீழ் இயங்கும் துணை பகுதி பொறியாளர் அலுவலகம் 35 மற்றும் பணிமனை அலுவலகம் 149 ஆகியவை புருட்டிஸ் காசில்ஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் சென்னை&28 என்ற முகவரியில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் எண்.128, ஆர்.கே.மடம் சாலை (மாநகராட்சி விளையாட்டுத் திடல் அருகில்), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை&28 என்ற முகவரியில் உள்ள புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.*
சென்னை குடிநீர் வாரியம் பகுதி அலுவலகம்&1 எண்.4/1 ரத்தின சபாபதி முதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை&21 என்ற முகவரியில் இயங்கி வந்தது.இந்த அலுவலகம் ஜூலை
1ம் தேதி முதல் எண்.19/35 ராமானுஜ ஐயர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை&21 என்ற முகவரியில் செயல்பட உள்ளது.பொதுமக்கள் குடிநீர்
, கழிவுநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மற்றும் குடிநீர் வரி, கட்டணம் செலுத்த புதிய அலுவலகங்களை அணு கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.