தினமணி 11.11.2009
குடிநீர் விநியோகம்: ஆட்சியர் ஆலோசனை
விருதுநகர், நவ.10-விருதுநகர் மாவட்டத்திóல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறும் பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேணடும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
÷மாவட்டத்திóல குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
÷கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாததூர், திருத்தங்கல் நகராட்சிகளில் தாமிரபரணி மற்றும் மானூர் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
÷மாவட்டத்தில் பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ- மாணவியர் விடுதிகள் ஆகியவற்றில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படாத விதத்தில், கண்காணித்து சீராக விநியோகிக்க வேண்டும். மேலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் வர வேண்டிய தண்ணீர் அளவு, தற்போது கிடைக்கும் குடிநீர் அளவு, உள்ளூர் நீராதாரங்கள் மூலம் கிடைக்கும் நீர் அளவு, நிலவும் பற்றாக்குறை குறித்துக் கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
÷விருதுநகர் மாவட்டத்தில் குடிநீóர் விநியோகம் பாதிக்காத விதத்தில் மின் விநியோகம் சீராக இருக்க வேண்டும். செட்டியார்பட்டி குடிநீர்த் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் விரைவுபடுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.
÷கூட்டத்தில் குடிநீர் வடிகால் செயற்பொறியாளர் கதிர்வேல், நிர்வாகப் பொறியாளர் சுப்புகனி, உதவி செயற்பொறியாளர்கள் சந்திரன், சௌந்திரராஜன், அந்தோணிராஜ், உதவி இயக்குநர் ராமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.இராஜ ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.