தினமணி 18.11.2009
குடிநீர் விநியோகம்: ஆட்சியர் ஆய்வு
விருதுநகர், நவ. 17: விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள், பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.
மாவட்ட நிலையில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளிóல் தாமிரபரணி மற்றும் மானூர் குடிநீர் விநியோகம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர் மழையால் நகராட்சி, பேரூராட்சிகளில் குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராமமூர்த்தி, குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர் கதிர்வேல், நிர்வாகப் பொறியாளர் முகமது சுப்புகனி, மின்வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் அந்தோணிராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோமதி சங்கர், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் க.ராஜராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.