தினத்தந்தி 26.09.2013
குடியாத்தம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு அழிக்கும் பணி
மாவட்ட கலெக்டர் பொ.சங்கர், வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக
இயக்குனர் குபேந்திரன் ஆகியோரது உத்தரவின்பேரில் குடியாத்தம் நகராட்சி
மற்றும் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இணைந்து டெங்கு
காய்ச்சல் கொசுப்புழு அழிக்கும் பணி நடைபெற்றது. இதனையொட்டி நகராட்சியில்
1, 2, 6 மற்றும் 7 ஆகிய வார்டுகளில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)
உமாமகேஸ்வரி முன்னிலையில் நகரமன்ற தலைவர் எஸ்.அமுதா கொசுப்புழு அழிக்கும்
பணியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வீடு தோறும் சென்று கொசுப்புழு அழிக்கும் பணி
மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம்,
ஆய்வாளர்கள் சீனிவாசலு, சிவா, களப்பணி உதவியாளர் பிரபுதாஸ், பணி
மேற்பார்வையாளர்கள் தயாளன், பென்னி, மூர்த்தி உள்ளிட்ட பணியாளர்கள்
ஈடுபட்டனர்.