தினமலர் 21.07.2010
குடியிருப்பு கட்டிடங்களில் செல்போன் டவர்கள் கட்ட தடை மாநகராட்சி தீவிர பரிசீலனை
மும்பை, ஜூலை 21: குடி யிருப்பு கட்டிடங்களின் மேலே செல்போன் டவர் களை நிறுவுவதற்கு தடை விதிப்பது குறித்து மாந கராட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
மும்பையில் ஏராள மான குடியிருப்பு கட்டிடங் களின் மேல் பகுதியில் செல்போன் டவர்கள் நிறுவப் பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் அந்த கட்டிடங்ளில் குடியிருப் போரின் உடல்நிலை பாதிக் கப்படலாம் என கருத்து நிலவுகிறது. இது போன்று கட்டிடங் களின் மே லே டவர் கள் கட்டு வதற்கு டெல்லி மாநக ராட்சி தடை விதித்து இருக்கிறது. அதேபோல மும்பையிலும் தடை விதிப்பது குறித்து மாநகராட்சி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி விவாதிக் கப்பட்டது. அப்போது, செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர் வீச்சால் ஏதேனும் தீங்குகள் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. கூடு தல் மாநகராட்சி கமி ஷனர் மனீஷா மாய்ஸ்கர் இது பற்றி கூறியதாவது:
மாநகராட்சி கூட்டத் தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக் கிறேன். இப் பிரச்சனை பற்றி யோசனை தெரிவிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்கும்படி அதில் கேட்டுக்கொண்டுள் ளேன். குழு தெரிவிக்கும் பரிந்துரைகளின் பேரில் இதற்கான புதிய கொள்கை உருவாக்கப்படும்Ó என் றார்.