தினமணி 07.02.2014
குடியிருப்போர் சங்கங்களுக்குப் பரிசுகள்
தினமணி 07.02.2014
குடியிருப்போர் சங்கங்களுக்குப் பரிசுகள்
சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கும்
குடியிருப்போர் நலச் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்று சென்னை
மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில்
உள்ள 200 வார்டுகளிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும்
குடியிருப்போர் நலச் சங்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், சென்னையில் சிறந்த சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
எனவே, சென்னையில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் தன்னார்வ
அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் அமைப்புகளின் பெயர்,
பிரதிநிதிகளின் பெயர் மற்றும் பதவி, பதிவு செய்த விவரம் (பதிவுச்
சான்றிதழ்), புகைப்பட ஆதாரத்துடன் செயல்பாடுகளின் விவரம் ஆகியவை குறித்த
தகவல்களுடன் சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு வரும் பிப்.
17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.