தினமலர் 14.05.2010
குத்தகை காலம் முடிந்தநிலத்திற்கு ‘சீல்‘
சென்னை : குத்தகை காலம் முடிந்ததால், கோர்ட் உத்தரவுபடி நிலத்தை கையகப்படுத்த, கட்டடத்திற்கு மாநகராட்சி ‘சீல்‘ வைத்தது.சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஒத்தவாடை தெருவில் 1,210 சதுர அடி நிலத்தை தியாகராஜ செட்டியார் என்பவருக்கு, மாநகராட்சி குத்தகைக்கு கொடுத்திருந்தது. குத்தகை காலம் முடிந்த பின் இடத்தை காலி செய்யாமல் அங்கு கட்டப்பட் டிருந்த கட்டடத்தில் ஆறு குடும்பத்தினர் வசித்து வந்தனர். இதனால் மாநகராட்சி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.கோர்ட் கடந்த ஏப்ரல், மாதம் 30ம் தேதி வரை கெடு கொடுத்தது. அதன் பிறகும், வீட்டை காலி செய்யாததால் மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்தது. புளியந்தோப்பு மண்டல அதிகாரி சார்லஸ் உத்தரவு படி மாநகராட்சியினர் நேற்று அந்த கட்டடத்திற்கு சீல் வைத்தனர். இடத்தை கையகப்படுத்தும் வகை யில் இன்று அந்த கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப் படும் என்று மாநகராட்சியினர் தெரிவித்தனர