தினமணி 17.07.2013
தினமணி 17.07.2013
குப்பையில்லா நகரமாக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு
கோவையைக் குப்பையில்லா நகரமாக்க மாநகராட்சி
துப்புரவுப் பணியாளர்களுக்கு செயல்விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு
செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம், வாரங்கல் நகராட்சியைப் போல கோவை மாநகராட்சியில்
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கான
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு திட்டத்தைச் செயல்படுத்திய
சஞ்சய் குப்தா, முத்துக்குமாரசாமி ஆகியோர் பேசினர்.
கோவை மாநகராட்சிக் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு
நிகழ்ச்சிக்கு மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் க.லதா
முன்னிலை வகித்தார். படக் காட்சிகளுடன் கூடிய செயல்விளக்கம் செய்து
காட்டப்பட்டது. துணை ஆணையாளர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள்
கே.ஆர்.ஜெயராம், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்திபன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
துப்புரவுப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பது தொடர்பாகவும்
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனுடன் இணைந்த பங்கேற்பு
குறித்தும் படக்காட்சிகளுடன் முத்துக்குமாரசாமி விளக்கமளித்தார்.
செயற் பொறியாளர் லட்சுமணன் வரவேற்றார்.