தினமணி 22.06.2010
குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விட எதிர்ப்பு: மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதம்சேலம்
, ஜூன் 21: சேலம் மாநகரில் துப்புரவுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து தனியார் வசம் பணிகள் ஒப்படைப்பது குறித்து கவுன்சிலர்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று மேயர் ஒப்புதல் அளித்தார்.சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது
. கூட்டத்துக்கு மேயர் ரேகா பிரியதர்ஷிணி தலைமை தாங்கினார். ஆணையர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.கூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சித் தலைவர் நடேசன் அவசரத் தீர்மானங்கள் வாசித்தார்
. இதையடுத்து சேலம் மாநகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் குப்பைகள் அள்ளும் பணியை மேற்கொள்வதை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து விவாதம் நடைபெற்றது.ரமணி
(கம்யூனிஸ்ட்): கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவச்சதா நிறுவனத்துக்கு குப்பை அள்ளும் பணியை வழங்கும்போது, மூன்று மாதத்துக்கு மட்டும் சோதனை முறையில் சில வார்டுகளுக்கு பணியை ஒப்படைத்துவிட்டு பின்னர் தொடர்ந்து வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ அவர்களுக்கு இதுவரையிலும் 21 வார்டுகளிலும் பணி வழங்கப்பட்டது.கீதா
(அதிமுக): குப்பை அள்ளும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது. அவர்கள் சரிவர குப்பை அள்ளுவதில்லை. எனவே மாநகராட்சியே ஆள்களை நியமித்து துப்புரவு பணியை மேற்கொள்ளலாம்.ரமணி
: மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலர்களின் கருத்துகளையும் கேட்ட பிறகே துப்புரவுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.மேயர் ரேகா பிரியதர்ஷிணி
: அனைத்து கவுன்சிலர்களின் கருத்தையும் கேட்ட பிறகே தனியாரிடம் பணியை ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.தர்மலிங்கம்
(காங்கிரஸ்): சேலம் நகராட்சியாக இருந்தபோது சுமார் 1,200 துப்புரவுப் பணியாளர்கள் இருந்தனர். ஆனால் மாநகராட்சியாக மாறிய பிறகு ஆயிரம் பேர் கூட இல்லை. எனவே தினக்கூலி அடிப்படையிலாவது பணியாளர்களை தேர்வு செய்து துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும்.தனசேகரன்
(பாமக): எனது வார்டுக்கு கொசு மருந்து சரிவர அடிப்பது இல்லை. மாநகராட்சியில் போதுமான அளவுக்கு மருந்து கைவசம் உள்ளதா என்று தெரியவில்லை. மேலும் கொசு மருந்தின் வீரியம் குறைவாக இருப்பதால் கொசுக்கள் இறப்பது இல்லை.இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சில திமுக உறுப்பினர்கள் எழுந்து தங்கள் பகுதியிலும் கொசு மருந்து அடிப்பது இல்லை என்று புகார் தெரிவித்தனர்
.இதையடுத்து பேசிய மேயர்
, குப்பை அள்ளும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார்.சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டதால் பெரும்பாலான அதிமுக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
.