தினகரன் 19.10.2010
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கூட்டம்
கும்மிடிப்பூண்டி, அக்.19: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாதாந்திர வரவு செலவு கணக்கு, பிறப்பு இறப்பு பதிவேடு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.2010 & 11ம் ஆண்டுக்கான சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தில் பழுதடைந்த சாலையை மேம்படுத்த ரூ60.06 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், இப்பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரி பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பேரூராட்சி சுகாதார பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்க மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சண்முகம், அறிவழகன், வடிவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.