தினகரன் 10.06.2010
குறைந்த வருவாய் பிரிவினருக்காக நகரங்களில் புதிய வீட்டு வசதி திட்டம்
பெங்களூர், ஜூன் 10: நகர்ப் புறங்களில் வசிக்கும் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி வியாபாரிகள் உள் ளிட்ட குறைந்த வருவாய் பிரிவினருக்கு 1 லட்சம் வீடுகள் அளிக்கும் புதிய வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணியநாயுடு தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று கட்டா சுப்பிரமணியநாயுடு அளித்த பேட்டி: நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி, பூ வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட குறைந்த வருவாய் பிரிவினருக்காக “பாக்யா சம்பதா யசஷு” என்ற பெயரில் புதிய வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ராஜிவ¢காந்தி வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இத்திட்டம் செயல்படும்.
இத்திட்டத்தின்படி 325 சதுர அடி, 375 சதுர அடி, 450 சதுர அடியில் மூன்றுவகையான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பரப்பளவின் அடிப்படையில் இதன் பெயர்கள் முறையே பாக்யா, சம்பதா, யசஷு என்று அழைக்கப்படும். ஒவ்வொரு வீடுகளின் மதிப்பு அவற்றின் பரப்பளவின் அடிப்படையில் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் வரையிலும் இருக்கும். இதற்காக பெங்களூரில் 250 ஏக்கர் நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளது. பாக்யா பெயரிலான 325 சதுர அடி வீடுகளிலும், சம்பதா பெயரிலான 375 சதுர அடி வீடுகளிலும் ஒரு படுக்கையறை மற்றும் ஒரு படிப்பு அறை இருக்கும். யசஷு பெயரிலான 450 சதுர அடி பரப்புள்ள வீடுகளில் 2 படுக்கையறை இருக்கும்.
இத்திட்டத்திற்கான மாதிரி கட்டிடம் ஹெப்பால் அருகேயுள்ள சிக்கநாயக்கனஹள்ளியில் கட்டப்பட்டுவருகிறது. 1 மாதத்தில் மாதிரி வீடுகள் கட்டும் பணி முடிந்துவிடும். முதல்கட்டமாக 1 லட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வீடுகள் வினியோகிக்கப்பட உள் ளன. இத்திட்டத்தில் வீட்டுக்கு ரூ.50 ஆயிரத்தை மானியமாக அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள் ளது. மேற்கூறிய அனைத்து வீட்டுவசதி திட்டங்களும் ஏப்ரல் மாதத்திற்குள் முடி வடையும். ஏப்ரல் முதல் வீடுகள், நிலங்கள் வினி யோகிக்கப்படும். இவ்வாறு கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரி வித்தார்.