தினமலர் 23.08.2012
குழாய் மூலம் குடிநீர் வினியோகம் ரத்து சேமித்து கொள்ள வாரியம் அறிவுரை
சென்னை : மெட்ரோ ரயில் பணிக்காக, குடிநீர் செல்லும் பிரதான குழாய்கள் இணைப்பு பணி நடப்பதால், ஆலந்தூர், மீனம்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், நாளை, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் இருக்காது என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணிக்காக, மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, பூமிக்குள் செல்லும் குழாய்களை மாற்றி யமைத்து, ஏற்கனவே உள்ள குழாய்களுடன் இணைக்கும் பணி, நாளை (24ம் தேதி) காலை, 8 முதல், இரவு, 8 மணி வரை நடக்க உள்ளது.
இதனால், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், கே.கே.நகர், கன்டோன்மென்ட், மீனம்பாக்கம், பம்மல், முனைவர் அவென்யூ, கண்ணபிரான் கோவில் தெரு, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் பகுதிகளுக்கு, காலை 8 முதல், இரவு 8 மணி வரை, குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாது.
இப்பகுதியினர், குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவசர தேவைக்கு குடிநீர் தேவைப்பட்டால், பகுதி பொறியாளர் 12 – 81449 30912, துணை பகுதி பொறியாளர்- 81449 30262, உதவி பொறியாளர் ஆலந்தூர் – 81449 30364, உதவி பொறியாளர் லாரி வினியோகம் – 81449 30165, தலைமை அலுவலக புகார் பிரிவு, 2845 4040, 4567 4567 என்ற எண்களில், தொடர்பு கொண்டால், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.