தினமணி 21.04.2013
கூடலூர் நகராட்சிப் பகுதியில் தீ தொண்டு நாள் விழா விழிப்புணர்வு
தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தீ தொண்டு நாள் விழா சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரில் தீ தொண்டு நாள் விழா சிறப்பு முகாமில், நகர்மன்றத் தலைவர் அருண்குமார், ஆணையர் மு. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கம்பம் தீயணைப்பு மீட்புத் துறை நிலைய அலுவலர் சோணை தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் தீயை எப்படி அணைப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்ளும் முறை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.