தினகரன் 27.05.2010
கூடலூர் நகரில் கால்நடைகளை மேயவிட்டால் நடவடிக்கை உறுதி
கூடலூர், மே 27: கூடலூர் நகரில் கால்நடைகளை மேய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடலூர் நகராட்சி கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது. கூடலூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் அன்ன புவனேஸ்வரி தலை மையில் நடந்தது. செயல் அலுவலர் ரஜினி, நகராட்சி அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூடலூர் நகரில் கால்நடைகளை மேய விடுவதை தடை செய்ய வேண்டும். கால்நடைகளை மேய விடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 11ம் தேதி கூடலூர் சுங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆடு, கோழி இறைச்சி விற்பனை நிலைய கடைகளுக்கு ஏலம் நடை பெறும்.
கூடலூர் காந்தி திடலில் நகராட்சியின் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கடைகளையும், நகராட்சி மூலம் கட்டப்பட்ட கடைகளையும் அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே, கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் 14வது வார்டு உறுபபினர் விஜய குமார், தனது வார்டு பகுதிக்கு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வளர்ச்சி பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி கூட்டத் தை புறக்கணித்து வெளியேறினார்.