தினமணி 01.08.2013
தாராபுரம் நகரில் சுகாதாரத்தை பேணி காக்கும்
வகையில் கூடுதல் துப்புரவு பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்
விரைவில் நிரப்பப்பட உள்ளது என ஆணையர் க.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
- மன்றத்தின்
சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர் ஞா.கலாவதி தலைமையில் புதன்கிழமை
நடைபெற்றது. ஆணையர் க. சரவணக்குமார், துணைத் தலைவர் எஸ். கோவிந்தாரஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
கருப்புசாமி (அதிமுக): சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார பணிகளில் தேக்கநிலை காணப்படுகிறது.
ஆணையாளர்:
நகராட்சியில் புதிய துப்புரவுப் பணியாளர்கள் பதிவு மூப்பு அடிப்படையில்
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்
பட்டியல் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் வேலை
வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என்றார்.
நாகேஸ்வரன் (அதிமுக): நகராட்சிக்குள்பட்ட 4-வது வார்டு பகுதியில் இதுவரை எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
- நகராட்சிக்கு
சொந்தமான பல கடைகள் நீண்ட ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் சிலரின்
கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக பல உறுப்பினர்கள் தெரிவித்தனர்.÷இதற்கு
பதிலளித்த ஆணையர், கடைகள் மறு ஏலம் விடப்பட உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான
இடத்தில் சுவரொட்டி ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியோருக்கு எவ்வித
அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க இயலாது என்றார்.