தினகரன் 03.02.2010
கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
சென்னை : மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கை தினமும் மேற்கொள்ளப்படுகிறது. 300 கைத்தெளிப்பான்கள், 50 பவர் ஸ்பிரேயர் மூலம் வீடுகளில் உள்ள கிணறு, தண்ணீர் தொட்டிகளிலும் மருந்து தெளிக்கப்படுகிறது.
நீர் வழித் தடங்களில் கொசுக்களை புழுக்கள் நிலையிலேயே ஒழிக்க 10 படகுகளை பயன்படுத்தி மருந்து தெளிக்கப்படுகிறது. மறுநாள், ஒவ்வொரு நூறு மீட்டர் தூரத்திற்கும் நீரை எடுத்து பரிசோதித்து கொசுப் புழுக்கள் அளவு கணக்கிடப்படுகிறது. வீடுகளில் தேவையில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள் போன்றவற்றில் நீர் தேங்கி கொசு உற்பத்தி வழிவகுக்கும் என்பதால் அவற்றை அகற்றி குப்பை தொட்டிகளில் கொட்டும்படிமக்களுக்கு அறிவுறுத்த படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.