தினமலர் 22.01.2010
கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறியும் பணியில் சுகதாரத்துறை
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் சுகாதாரத்துறையினர் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து வருகின்றனர்.
சில வாரங்களாக ஆண்டிபட்டி பகுதியில் வைரஸ், சிக்–குன்குனியா, டைபாய்டு காய்ச்சல் பரவி வருகிறது. நோய்களை பரப்புவதில் கொசுக்கள் முதலிடம் பிடிக்கிறது. கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் பல இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக கொசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் தேக்கி வைத்திருக்கும் நீர், சுத்தம் செய்யப்படாத சாக்கடை, கழிவு நீர் தேக்கம் இவைகளில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.
எந்த இடங்களில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது என்பதை கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதி முழுவதும் சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன் கூறுகையில்,”கொசுக்களை ஒழிக்க சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்தின் அடிப்படையில் உற்பத்தி மையங்கள் கண்டறியப்படுகிறது. ஒட்டு மொத்தமாக எல்லா இடத்திலும் தடுப்பு நடவடிக்கை எடுப்பதால் கட்டுப்படுத்த முடியும்‘ என்றார.