தினமலர் 21.04.2010
கொசு ஒழிப்புக்கு கப்பி மீன் சப்ளை
மதுரை:மதுரையில் நான்கு மண்டலங்களிலும், கொசுக்களை ஒழிப்பதற்கு மாநகராட்சி தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது.கழிவு நீர் வாய்காலில் கப்பி மீன்கள் விடப்படுகிறது. இவை கொசுப்புழுவை உணவாக உட்கொள்கிறது. ஆகஸ்ட் முதல் தண்ணீர் தொட்டி உள்ள வீடுகளுக்கு, இந்த கப்பி மீன் சப்ளை செய்யப் பட உள்ளது. சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் கூறுகையில், ”நான்கு மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு பணியில் 40 ஊழியர்கள் மட்டும் உள்ளனர். ஒவ்வொரு மண்டலங்களிலும் கூடுதலாக தலா 25 ஊழியர்கள் நியமனம் செய்யப் பட்டால் மழைக்காலங்களிலும் கொசு இல்லாத மதுரையை உருவாக்க முடியும்,” என்றார