தினமணி 04.07.2013
கொடைக்கானல் நகராட்சி சார்பில், மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நகராட்சி
அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, சட்டப்பேரவை உறுப்பினர்
வேணுகோபாலு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில், நகர்மன்றத் தலைவர்
(பொறுப்பு) எட்வர்ட், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் இளம்வழுதி, அவைத்
தலைவர் வெங்கட்ராமன், நகர கூட்டுறவு தொடக்க வங்கித் தலைவர் ஏ.டி.
ஆரோக்கியசாமி, நிர்வாகி டாக்டர் கணேஷ், வேளாண்மைக் கூட்டுறவுத் தலைவர்
பிச்சை, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பொன்னுத்துரை, நகரச்
செயலர் ஜான்தாமஸ், அதிமுக நிர்வாகிகள் சாதிக், ஸ்ரீதர் மற்றும் நகர்மன்ற
உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், நகர்ப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ,
மாணவிகள் எனஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலமானது, மூஞ்சிக்கல்,
காமராஜர் சாலை, அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், பேருந்து நிலையம ஆகியப்
பகுதிகள் வழியே சென்றது. மழை நீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய
பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் கோஷமிட்டுச் சென்றனர்.