தினமலர் 03.06.2010
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் கூடுதலாக வேண்டும் தி.பூண்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாண்டியன், மேலாளர் கிளமன்ட் அந்தோணிராஜ், ஓவர்சியர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், கணக்கர் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்ட விவாதம் வருமாறு: கலாவதி தி.மு.க: எனது வார்டில் கழிவறை வளாகம் சீரமைக்க வேண்டும். குளத்தில் படிக்கட்டுகள் மோசமாக உள்ளது. ஆகாயத்தாமரை, பாசிகளை தூர்வார வேண்டம். குடிநீர் பிரச்னை அதிகம் உள்ளது.
சிக்கந்தர் தி.மு.க: ரயில்வே கேட் பகுதியை கடந்து கூட்டு குடிநீர் சரிவர வரவில்லை. புதிய பாலம் அருகில் படித்துறை அமைக்க வேண்டும். எஜமான் நகர் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை.
சாமிநாதன் தி.மு.க: ஐந்து தெரு விளக்குகள் புதிதாக அமைக்க வேண்டும். பாதாள சாக்கடைத்திட்டம் எப்போது அமைக்கப்படும். நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது. சன்னதி தெருவில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.
துணைத்தலைவர்: பாதாள சாக்கடை திட்டம் அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பக்கிரிசாமி இந்திய கம்யூ.,: ஐந்து தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். கூட்டு குடிநீர் புதிதாக பைப்பு அமைக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் கணக்கெடுக்க வேண்டும்.
மாயா தி.மு.க: ஃபிளக்ஸ் போர்டு வைக்க நகராட்சி பணம் வசூலிக்க வேண்டும். ஆற்றங்கரை சாலை தார்சாலையாக்க வேண்டும்.
எழிலரசன் காங்கிரஸ்: நகராட்சியில் புளூ பிரிண்ட் எடுக்க கட்டணம் கூடுதலாக வசூலிக்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை விற்பனையை முழுமையாக பயன்படுத்த தடை செய்ய வேண்டும்.
ஹாஜாமைதீன் காங்கிரஸ்: அரசு உயர்நிலைப்பள்ளி சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும். நகராட்சி பகுதியில் மரக்கன்று நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய், பன்றி, மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது.
கலைமதி தி.மு.க: பெருமாள் கோவில் படித்துறை அருகே குப்பைகள் கொட்டிக்கிடக்கிறது. கூட்டுக்குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும்.
செல்வகுமார் காங்கிரஸ்: சாலைகள் மோசமாக உள்ளது. சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும். படித்துறை கட்டித்தர வேண்டும். மோசமாக உள்ள மின்கம்பம் மாற்றித்தர வேண்டும்.
ஜிம்மாபானு அ.தி.மு.க: அடி பைப்பு போட்டுத்தர வேண்டும். மருத்துவமனை வளாகத்துக்கு கூட்டு குடிநீர் பைப் அமைக்க வேண்டும்.
துணைத்தலைவர்: பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கூட்டு குடிநீர் வழங்க கடிதம் அனுப்பினால் அமைத்து தரப்படும்.
லெட்சுமி இந்திய கம்யூ.,: ஜீவா தெரு வயலில் உள்ள மின்கம்பத்தை சாலை ஓரத்தில் அமைத்து மின் விளக்குகள் போட வேண்டும். கல்வெட்டி பாலம் உடைந்துள்ளது. அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்ட வேண்டும்.
சண்முகசுந்தர் அ.தி.மு.க: குடிநீர் பிரச்னை அதிகமுள்ளது. நகரெங்கும் பணம் கட்டாமல் 75 வீடுகளில் கூட்டுக்குடிநீர் எடுக்கின்றனர். நகரில் உள்ள குளங்கள் உபயோகமில்லாமல் மோசமாக உள்ளது. சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தெரு விளக்குகள் முழுமையாக பராமரிக்காமல் பகலில் எரிகிறது. நாய், பன்றி தொல்லை அதிகமாக உள்ளது.
வீரமணி தி.மு.க: சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். கோவில் திருவிழா நடப்பதால் சாலைகளை சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.