தினமணி 04.03.2010
கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்பேற்பு
காரைக்குடி,மார்ச் 3: கோட்டையூர் பேரூராட்சியில் மூன்றாண்டுகளாக தேக்கமடைந் திருக்கும்பணிகள் அனைத்தும் ஓராண்டிலேயே நிறைவேற்றப்படும் என்று புதிய தலை வராக பொறுப்பேற்றுக்கொண்ட கேஆர். ஆனந்த் தெரிவித்தார்.
காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியின் புதிய தலைவராக கேஆர். ஆனந்த் போட்டியின்றி கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.26) தேர்ந்தெடுக் கப்பட்டார்.
புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்ட கேஆர்.ஆனந்த் பதவியேற்பு விழா புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் குமரேசன் அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப.துரைராஜ், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப. முத்துராமலிங்கம், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை, கோட்டையூர் பேரூராட்சி துணைத்தலைவர் உ. உடையப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.
தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியது:
கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.70 லட்சத்தில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப் படும். அதில் குடிநீர், மின்விளக்கு, பூங்கா மற்றும் சாலைவசதிகள் அடங்கும். கடந்த மூன்றாண்டுகளாக முடங்கிவிட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.