தினகரன் 12.08.2010
கோலாப்பூர் மாநகராட்சி நோட்டீசை எதிர்த்து லதா மங்கேஸ்கர் ஐகோர்ட்டில் மனு
மும்பை, ஆக. 12: ஸ்டூடியோ வை இடிக்கும் நடவடிக்கை யை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு, கோலாப்பூர் மாநகராட்சி தனக்கு அனுப் பிய நோட்டீஸ் மீது நட வடிக்கை எடுக்க உத்தரவிடக் கூடாது எனக்கோரி திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
லதா மங்கேஸ்கருக்கு(80) கோலாப்பூரில் சொந்தமாக ஜெய்பிரபா என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்று உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஸ்டூடி யோ, பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் எனவும் கூறி கடந்த ஏப்ரல் மாதம், லதா மங்கேஸ்கருக்கு கோலாப்பூர் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஸ்டூடியோ இடிந்து விழுந்தால் அருகில் உள்ள சாலையில் செல்லும் மக்கள் மற்றும் பள்ளி மாண வர்கள் பாதிக்கப்படுவார் கள். ஸ்டூடியோ இடிந்து விழுந்து விபத்து எதுவும் ஏற்பட்டால் அதற்கு லதா மங்கேஸ்கர்தான் பொறுப்பு என அந்த நோட்டீசில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
நோட்டீஸ் கிடைத்ததை அடுத்து தனது ஸ்டூடியோவை லதா மங் கேஸ்கர் இடிக்க தொடங் கினார். இந்நிலையில் கோலாப்பூர் மாநகராட்சி தற்போது லதா மங்கேஸ் கருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஜெய்பிரபா ஸ்டூடி யோவுக்கு புராதன அந்தஸ்து கிடைத்துள்ள தால் அதை இடிக்க கூடாது என தெரிவித்துள்ளது.
ஸ்டூடியோவை இடிக்கும் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கி விட்டதால், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த லதா மங்கேஸ்கர், ஸ்டூடியோவை இடிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு, கோலாப்பூர் மாநகராட்சி தனக்கு அனுப் பிய நோட்டீஸ் மீது நட வடிக்கை எடுக்க உத்தரவிடக் கூடாது என கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.டி. சின்ஹா, மிருதுளா பட்கர் ஆகியோர் “லதா மங்கேஸ்கர் மனுவுக்கு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண் டும்” என கோலாப்பூர் மாநகராட்சிக்கு உத்தர விட்டனர்.